இருளிலும் ஒளிர்கின்றனடாஸ்மாக் கடைகள்!அதனால் பகலிலும்இருண்டே கிடக்கின்றன, எங்கள் வாழ்க்கை.........
தன் அழகுக்கு காரணம் fair and lovelyதான்
என எந்த உலக அழகியும் சொல்லியதில்லை.
horlicks கம்பெனியின் மகனோ மகளோ
இதுவரை எந்த விளையாட்டிலும் ஜெயித்ததில்லை
ஆனாலும் சொல்லிக் கொள்கிறார்கள்
தங்கள் கம்பெனிதான் சிறந்ததென்று
யாருக்கும் தெரிவதில்லை
மிகைபடுத்தப்பட்ட உண்மையைப் போன்ற
பொய்யை விட
ஒரு சாதாரணமான உண்மை மேலானதென்று......
உன் சுவாசக்காற்றில் உயிர் வாழ்கிறேன்.... இப்படிக்கு, உன் விரல்கள் ஏந்தி நிற்கும் புல்லாங்குழல்.
தாஜ்மஹாலைப் பற்றிஇவ்வளவு வியப்பாக பேசுகிறாய்!எனக்குத்தான் அதிசயமாயிருக்கிறது,ஒரு அதிசயம் இன்னொரு அதிசயத்தைப் பற்றி பேசுவது......
நீ ஒவ்வொரு முறை கையழுத்திடும் போதும் தவிப்போடு காத்து நிற்கின்றன மொழிகள்.....
வண்ணத்துப்பூச்சி சிறகாய் பட படக்கிறது என் இதயம், நந்தவனமாய் நீ என் அருகில் நடந்து செல்லும்போது.........
தேவதையை பார்த்தேன் என்று சொன்னால் என்னை பைத்தியம் என்கிறாயே நீ முகம் பார்க்கும் கண்ணாடி உபயோகிப்பதில்லையா?
தப்பித் தவறி கூட நீ
கரும்பலகையை தொட்டுவிடாதே,
அதன்மேல்
ஒட்டிக்கொள்ளப் போகிறது
உன் சிவப்பு........
தொட்டாலே சுருங்கி விடுமாம்தொட்டாச்சிணுங்கி! அதற்கு எங்கே தெரியப்போகிறது பார்த்தாலே சிணுங்கும் ,உன்னைப்பற்றி....
வெள்ளை உடையில்
இன்று நீ வீதீ உலா
அதனால்தான் என்னவோ !
கோடையிலும் வானிலை அறிக்கை
பனிமூட்டம் என
தவறாக வாசிக்கப்பட்டது!
அம்மா! அம்மா!
அம்மா! அம்மா! பொன்னம்மா!
உன் பெயரைப் போல
உன் மனசு முழுக்க பொன்னம்மா!
சிறகுகள் இல்லை! இல்லை!
ஆனாலும் நீ தேவதைதான்!
பொன்னகையை விட மதிப்புகூட
உன் புன்னகைதான்!
பத்துமுறை கூப்பிடம்மா,
என் பெயரை சொல்லியே!
எனக்கு பத்து வயசு
குறையுமம்மா உண்மையே!
பூக்களில் படுக்கை செய்து
படுத்தும் பார்த்தேனே!
அதுவும்கூட,
உன் பொன்மடிக்கு ஈடு இல்லையே!
சித்ரா சுசீலா ஜானகி
பாட்டும் கேட்டேனே,
ஆனாலும் எதுவும்
உன் தாலாட்டு போல இல்லையே!
என் பக்கத்தில் நீயும் நிக்கிறப்ப
எந்த லோகமும்
எனக்கு சொர்க்க லோகம்தான்!
கோபத்தில கூட நீ அழகிதான்!
நீ அடிக்கிறப்ப நான் அழுவது நடிப்புதான்!
பத்து மாதம் நீ என்னை
பார்த்துகிட்ட பக்குவமா!
நான் இந்த வாழ்க்கை முழுதும்
உன்னை பார்த்துக்குவேன் பத்திரமா!
எந்தன் கண்ணில் நீர் வழிந்தால்
உன் இதயத்தில் உதிரம் வழிந்ததே!
அந்த இதயத்திற்கு
நானும் என்ன மருந்து தருவேனோ?
எனக்கும் தெரியலியே!
நிலவுல வீடு கட்டி
உன்னை தங்க வைக்கணும்!
கோலாருக்கு உன் பெயரை வைத்து,
உன்னை சொக்க வைக்கணும்!
சென்னை சில்க்ஸ விலைக்கு
வாங்கி, உனக்கு பரிசளிக்கணும்!
ஆக மொத்தம் ஆக மொத்தம்
உனக்கு நானும் நல்ல பிள்ளையா இருக்கணும்!
என் உடலோட ஒட்டியிருந்த
உன் தொப்புள்கொடி பிரிஞ்சிருச்சு!
ஆனா என் உயிரோட ஒட்டியிருக்கும்
உன் அன்பு பிரியலயே?
-- charalmalar