
அம்மா! அம்மா!
அம்மா! அம்மா! பொன்னம்மா!
உன் பெயரைப் போல
உன் மனசு முழுக்க பொன்னம்மா!
சிறகுகள் இல்லை! இல்லை!
ஆனாலும் நீ தேவதைதான்!
பொன்னகையை விட மதிப்புகூட
உன் புன்னகைதான்!
பத்துமுறை கூப்பிடம்மா,
என் பெயரை சொல்லியே!
எனக்கு பத்து வயசு
குறையுமம்மா உண்மையே!
பூக்களில் படுக்கை செய்து
படுத்தும் பார்த்தேனே!
அதுவும்கூட,
உன் பொன்மடிக்கு ஈடு இல்லையே!
சித்ரா சுசீலா ஜானகி
பாட்டும் கேட்டேனே,
ஆனாலும் எதுவும்
உன் தாலாட்டு போல இல்லையே!
என் பக்கத்தில் நீயும் நிக்கிறப்ப
எந்த லோகமும்
எனக்கு சொர்க்க லோகம்தான்!
கோபத்தில கூட நீ அழகிதான்!
நீ அடிக்கிறப்ப நான் அழுவது நடிப்புதான்!
பத்து மாதம் நீ என்னை
பார்த்துகிட்ட பக்குவமா!
நான் இந்த வாழ்க்கை முழுதும்
உன்னை பார்த்துக்குவேன் பத்திரமா!
எந்தன் கண்ணில் நீர் வழிந்தால்
உன் இதயத்தில் உதிரம் வழிந்ததே!
அந்த இதயத்திற்கு
நானும் என்ன மருந்து தருவேனோ?
எனக்கும் தெரியலியே!
நிலவுல வீடு கட்டி
உன்னை தங்க வைக்கணும்!
கோலாருக்கு உன் பெயரை வைத்து,
உன்னை சொக்க வைக்கணும்!
சென்னை சில்க்ஸ விலைக்கு
வாங்கி, உனக்கு பரிசளிக்கணும்!
ஆக மொத்தம் ஆக மொத்தம்
உனக்கு நானும் நல்ல பிள்ளையா இருக்கணும்!
என் உடலோட ஒட்டியிருந்த
உன் தொப்புள்கொடி பிரிஞ்சிருச்சு!
ஆனா என் உயிரோட ஒட்டியிருக்கும்
உன் அன்பு பிரியலயே?
-- charalmalar

No comments:
Post a Comment