Powered By Blogger

Monday, July 31, 2006



பூவுலகில் ஒரு தேவதை !
அவள் பூமணம் படைத்த தேவதை !
கலியுலகில் ஒரு தேவதை !
அவள் கள்மனமில்லாத தேவதை !
அரக்க மனம் படைத்த இவ்வுலகில்
அவள் இரக்க குணம் படைத்த தேவதை !
யாரந்த இனிய தேவதை !
ஆம் அன்னை தெரசா ஒரு தேவதைகளின் தேவதை !

Wednesday, July 26, 2006

mazhai



மழை விழுது
மண்ணைத் தொடுது
மனதில் குளிர் நிரப்பி
புது கவிதை தருது

நீங்கள் குடை பிடித்து
அதன்வழி மறைப்பதால்
அது சில நேரங்களில்
வராமலே போய்விடுகிறது
வறட்சி தருகிறது.

மழை ஒரு குழந்தை
அழுது கொண்டே பிறப்பதால்
மழை ஒரு பெண் நிலம்
நோக்கி பயணிப்பதால்

மழை ஒரு விருந்தாளி
நாம் அவரை வரவேற்போம்


Friday, July 14, 2006




உன் பார்வை
பட நேர்ந்தால்

முள் கூட பூ பூக்கும்.

பிறகு எப்படி
என் மனதில் மட்டும்
காதல் பூ பூக்காமல் இருக்கும்?


குடை பிடித்துச்
செல்லும் மழை மேகம் நீ.

நீ
மழையில் நனைவதில்லை
எந்நாளும்....
ஆனால்
நான்
மட்டுமே
நனைகிறேன்.

உனை
பார்க்கும்போதெல்லாம்
மனதொடு மழைச் சாரல் கொண்டு........

Thursday, July 13, 2006


கோயிலுக்கு உள்ளே
உண்டியல்கள் கொள்ளையடிப்பதற்காக.....

வெளியே தட்டுக்கள்
வயிறு பசிப்பதற்காக
....

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அழகாய் தெரிந்தது
பௌர்ணமி நிலவு
சாலையில் தேங்கிய மழை நீரில்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுதந்திர தினத்தன்று
கூண்டிற்குள் நின்று

கொடியேற்றுவார் குடியரசுத் தலைவர்....

ஐம்பத்தியேழு வருட

ஜனநாயகதையும் எதிர்த்து நிற்கும்
பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்கள் .......

இந்நாட்டின்
வருங்கால சிற்பிகள் என்று
தெரிந்தே சிலர்
குப்பை தொட்டியில் விட்டுச் செல்வர்
குழந்தைகளை.....

சில கன்னிகளின் கற்பு
காவல் நிலையத்திலயே களவாடப்படும்....

சில கணங்களில்
சட்டசபைகள்கூட
போர்க்களமாய் மாறிவிடும்....

காவி நிறத்தில் காமுகன்கள்

என செய்திகள் வெளியாகும் .......

காந்தியின்
இராட்டைச் சின்னத்திலும்
குத்த்ப்படும் கள்ள ஓட்டு
......

அரசியலில் மட்டும் அவ்வபோது
தமிழ் தன் முகம் காட்டும்
.....

இந்த கணங்களில் எனக்கென்று
பல இதயங்களல்லாது
சில இதயங்களாவதுவேண்டும்
துடிப்பதற்காக இல்லை
வெடிப்பதற்காக
.......









என் உறக்கத்தில் வந்த

உன் கனவுகளுக்கு உயிர்
தந்துவிட்டு,

நான் கனவாகிப் போனேன்!

மீண்டும் நான் உன் கனவுகளில்

உயிர் பெறுவதற்காக.......

Wednesday, July 12, 2006


உன்னை ஒரு முறையாவது
தாஜ்மஹாலுக்கு அழைத்துச்
செல்ல வேண்டும்,


ஏனெனில்
பாவம் அந்த தாஜ்மஹால்
ஒரு முறையேனும் மும்தாஜை
பார்க்கட்டுமே....



குயிலென குரல் கொண்டாள் !
மயிலென நடைகொண்டாள் !
பூமணம் வீசும் கூந்தல்கொண்டாள்!
தென்றலெனெ தேகம்கொண்டாள் !
கழுத்தென வெண்சங்கு கொண்டாள்!
கரங்களென செங்காந்தள்கொண்டாள்!
வளை போட வாழை கொண்டாள் !
நடை போட நதியைகொண்டாள் !
பூங்கொடி இடைகொண்டாள் !
தேன் சிந்தும் அதரம் கொண்டாள் !
மான் கொம்பென மார் கொண்டாள்!
முழு மதியென முகம்கொண்டாள் !
இவை அத்தனையும்
அவள் கொண்டுவிட்டு
என்னை காதல் கொள்ளாதே என்கிறாள்!
நீ கொடுத்த கற்கண்டை விட அதிகமாய் இனிக்கிறது உன் புன்னகை......

Saturday, July 08, 2006


உன்னைப் பார்த்த நாளில்....

இது வசந்த காலமோ
என் வாழ்விலே.....
மனம் இன்பத்தில் ஆடுதே
இந்நாளிலே......

காவிரி

உன் மீது கற்கள் எறிந்தும்
காகிதக் கப்பல்கள் விட்டும் ரசித்தேன்
பால்ய வ்யதில் .....
வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக் காவிரியின்
புகழை படித்து மகிழ்ந்தேன்
பள்ளி வயதில் ....
உன்மேல் தாவியும்
நீந்தியும் மகிழ்ந்தேன்
பருவ வயதில்....
இன்று உன்னில் தெரியும்
கானல் நீரை மட்டும்
ரசித்துச் செல்கிறேன் மீண்டும்
இவ்வழி வர மனமில்லாமல் ...

Friday, July 07, 2006







பாப்பா பாட்டு

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !
அவை ஷ்காலர்ஷிப்பும் தருமடி பாப்பா
!

கல்வி ஏடுகள் உள்ளதடி பாப்பா
!
அவை பண நோட்டுக்களுக்கேதானடி பாப்பா
!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
லஞ்சங்கள் தானடி பாப்பா
!

ஆணுக்கு சரிசமர் பெண் எனும் திட்டங்கள்
விட்டத்தில் நிற்குதடி பாப்பா
!

நள்ளிரவில் நீ தனியே நடக்கும் வரை
இந்நாட்டிற்கு சுதந்திரம் இல்லையடி பாப்பா
!

ஆனால் அந்த சுதந்திரம் கிடைத்திட
யாதுமொரு சாத்தியம் இல்லையடி பாப்பா
!

மேலைநட்டு குளிர்பான
குடுவைகள் நிரம்புதடி பாப்பா
!

ஆனால் தமிழர் ஏழைக் குடிசை தன்னில்
குடிநீர் தாகமடி பாப்பா
!

காக்கும் கடவுள் அன்று
திரௌவுபதியின் கற்பை காத்தாரடி பாப்பா
!

ஆனால் காக்கும் காவலர்களே இன்று
கற்பை களவாடுவர் அறிந்துகொள் பாப்பா
!

ஒடும் விளையாட்டு போதுமடி பாப்பா !
இந்த சமுதாயத்தை களையெடுக்க நீ புறப்புடு பாப்பா
!



Thursday, July 06, 2006


தாஜ்மஹால்

வானில் முழுமுகமாய்
காட்சி அளிக்கிறது
பௌர்ணமி நிலா !


அதன் சரீரமாய்
மண்ணில் அமர்ந்திருக்கிறது தாஜ்மஹால் !

அஞ்சலி


அஞ்சலி

மனிதர்கள் இறந்தால்
மலர்களைக் கொண்டு அஞ்சலி செலுத்தலாம் ,
ஆனால் இங்கு இறந்ததே
மலர்கள் அல்லவா!
அதனால்
எதைக்கொண்டு அஞ்சலி செலுத்த?

இல்லை! இல்லை!
அவர்கள் மலர்கள் இல்லை1
மொட்டுக்கள்தான்...

மலரும் முன்பே
மடிந்துந போன மொட்டுக்கள்!
அந்த கொடுந்தீயில்
கரிந்து போன சிட்டுக்கள்!

என் கண்ணீர் துளிகள்
அவர்கள் உடல்களை
இல்லாவிட்டலும்,
அவர்கள் உள்ளத்தையாவது
குளிரப்படுத்தட்டும்
...