Powered By Blogger

Saturday, December 08, 2007


காவல் நிலையம் செல்ல மனம் இல்லை!

பத்திரிக்கைக்கு அறிவிப்பு கொடுக்க பணமில்லை!

எடுத்த பொருளை அதே இடத்தில்

வைத்து விடவும் தோன்றவில்லை!

பேருந்தில் என்னைத் தவிர்த்து வேறு ஆளும் இல்லை!

ஆனாலும் என் கையிலிருக்கும் ஒற்றைக் காலணியை,

உரிய மழலையிடம் சேர்க்க வேண்டும்

எனத் துடிக்கிறது மனது............

Thursday, December 06, 2007


உன் முகம் பார்க்கும்
கண்ணாடியைக் கேட்டுப் பார் தெரியும்,
நான் ஏன் உன் முகம்
பார்க்க வ்ரும்புகிறேன் என்று........

Tuesday, November 27, 2007


சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து

குரலெழுப்ப முடியாமல்

குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்


பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்

என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,

வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும்


பெண் பார்க்கும் நிகழ்வில்

வாய் ஊனத்திற்கு தனியாய்

மாபிள்ளை வீட்ட்டார் வரதட்சணைகேட்ட போதும்

இல்லாத வலி இப்போது


அழுகின்ற குழந்தைக்கு

தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது

Monday, November 26, 2007


சுதந்திர தினத்தன்று

சமாதான புறாக்களை

பறக்க விட்டுவிட்டு

ஏவுகணைகளின் அணிவகுப்பையும்

ஏற்றுக்கொள்கிறார்

குடியரசுத் தலைவர்






நான் உன் வளையைகளுக்குள்



புகுந்துவிடும்படி



எங்கனம் ஆனேன்?



நீ என் கனவுகளில்



வளைய வந்ததினால்தானே!

Saturday, November 24, 2007


முன்பொருநாள் நான்
தேடித்தேடி வாங்கிய பூந்தொட்டிகளும்
பார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்
இன்று நான் கவனிக்காத போதும்
பூத்துக் குலுங்குகின்றன
நான் விதவையென்பதை கவனிக்காதபடி

Monday, July 09, 2007




என்னைப் போலவே


உன் கொலுசிற்கும் தெரியவில்லை


உன்னை எப்படி சத்தமிடாமல்


முத்தமிடுவதென்று

Wednesday, May 30, 2007


நமக்குத் திருமணம் எப்பொழுதென்று
நீ கிளிஜோஸியம் கேட்கப் போனாய்,
உன்னைப் பார்த்ததும் தனக்கு
விடுதலை எப்பொழுதென்று கேட்டதே கிளிஜோஸியம்!

Thursday, May 24, 2007


நீ சிரிப்பதையும் , கோபப்படுவதையும், அழுவதையும்
ஒன்றாக வரைந்து விட்டார் லியனார்டோ
தனித்த்னியாக வரைந்திருந்தால்
இவ்வுலகிற்கு தெரிந்திருக்கும்
நீதான் மோனலிசாவென்று

Thursday, April 26, 2007


நியூட்டனின் ஈர்ப்பு விசை
ஆப்பிளில் தொடங்கியது,
உன் விழி ஈர்ப்பு விசையோ
ஆதாம் ஆப்பிளில் முடிகிறது..........

உன் பாதச் சுவடுகளை
பார்த்த பின்புதான் அறிந்தேன்,
உனக்கு கால்களாலும்
கோலம் போடத் தெரியுமென்று...........



வைகறையில் நீ கோலமிடும்
அழகை ரசிக்கத்தான்,
இந்த வானம்
தன் கோடி கண்களுடன்
விடிய விடிய கத்திருக்கிறதோ...............

Saturday, April 07, 2007


நீ கண் சிமிட்டும் போது மட்டுமே
நீ தேவதையில்லை என்பதை
நான் உணர்கிறேன்....

சித்திரை மாதத்து நண்பகலோடு
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து,
சித்திரை பௌர்ணமியாய்
உன்னையும் ஏற்றிக் கொண்டு............


நிலவை சுற்றும் பூமியாய்,
நான் உன்னை என் எண்ண்ங்களால்
சுற்றிக் கொண்டிருந்தேன்


கோடைக் காலத்தில் சாரலாய்
காற்றில் இசை மழையை
தூவிக் கொண்டிருந்தது வானொலி

நீ பார்க்காத போது நானும்
நான் பார்க்காத போது நீயும்
மாறி மாறி பார்த்துக் கொண்டோம்


நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும்
நீ முன் படிக்கட்டுகளில் கீழிறங்கினாய்!
நான் உன்னைப் பார்த்து கொண்டே
பின் படிக்கட்டுகளின் வழியே கீழிறங்குகையில்,


"அவள் எப்போது மீண்டும் வருவாள்"
என மெல்லிய குரலில் என்னிடம் கேட்டது பேருந்து............
நான் வரும்பொதுதான் அவளும் வருவாள்
என்றேன் நான் பேருந்தைப் பார்த்து
புன்னைகைத்த படியே................


அதை கேட்டதும்
என்னைப் பார்த்து முறைத்தபடியே
நகர்ந்தது பேருந்து......................................

Friday, March 30, 2007


உன் காலடிச் சுவடுகளை காண்பதற்காக
நான் கடற்கரை மணலில் காத்திருந்தேன்,
நீ தேவதை என்பதை
மறந்த வண்ணம்..............

Friday, March 23, 2007

மலரினும்..................




நீ மல்லிகையைச் சூடினாய்
உன் மல்லி கைகள் கொண்டு.....................
ஆம் மல்லிகையை விட மென்மையானது உன் கை !

Friday, January 19, 2007

(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*



எனைக்கண்டதும் ஓடிஓடி

ஒளிந்து கொள்கிறாய் நீ

அதனால் ஒளியின்றியே

சுழல்கிறது என் உலகம்.............