Powered By Blogger

Sunday, December 17, 2006


விசித்திரமாய் இருக்கிறது
சித்திரமாய் இருந்தும் நீ சிரிப்பது

Friday, December 15, 2006

ஜில்லென்று ஒரு மழைக் காலம்



அடைமழைக் காலத்தில்
உன் உடை தேகம் நனையாமலிருக்க
ஒரு குடையுடன் காத்திருக்கிறேன் நான்!

நீவரும் வரை என் கால் நனைத்துப் போகும்
செம்மண் மழைநீரை பார்த்திருக்கிறேன்!

சாலையின் இடையில் உள்ள
ஒரு வளைவில் இருந்து நீ
என் காட்சிக்கு புலப்படத் தொடங்குகிறாய்!

மழையை ரசித்து வரும் நீ,
எனைப் பார்த்ததும் வெட்கம் காட்டி
தலை குனிகிறாய்!
தரையில் மழைநீர் உன் முகம் காட்டுகிறது!

உனக்கும் எனக்கும் இடையில்
முன்பு நூறு மழைத் துளிகள் விழுந்தன!
அது பத்தாகக் குறையும் போது
நீ என் அருகில் நிற்கிறாய்!

என் கைகளில் உள்ள குடையை
உன்னிடம் தர முற்படுகையில்
நீ வானம் பார்த்து சிரிக்கிறாய்!

இப்போது மழை நின்று
இலேசான தூறல் மட்டுமே தொடர்கிறது!
குடைக் கம்பிகளை நான் மடிக்க
அது மழைநீரை கண்ணீராய் வடிக்கிறது!


நீ எனைத் தாண்டி முன் செல்கிறாய்
நான் உன்னை பின் தொடர்கிறேன்!
நீ நடக்கும் போது
உன் பாதங்கள் மழைநீரை பிரிக்கின்றன,
அவை இணையும் முன்
என் பாதங்கள் மீண்டும் பிரிக்கின்றன!

நான்கு பாதங்க்ள் மண்ணில் செயல்பட்டாலும்,
இரண்டு காலடி ஓசைகளே கேட்கின்றன!
சந்தேகத்தொடு நீ திரும்புகையில்,
நான் சந்தோசத்தோடு உன் முகம் பார்க்கிறேன்!

வழியில் பள்ளிச் சிறுவர்கள்
வானவில்லைக் கண்டு பரவசம் அடைகின்றனர்,
கூடவே நீயும்...
ஆனால் உன் சந்தோசத்தில்
நான் ஆயிரம் வானவில்களை பார்ப்ப்தறியாமல்........

உன் வீடிருக்கும் தெரு வந்ததும்
நீ என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்!
சிவப்பு விளக்கு விழுந்த இரயில் பாதையென
என் அன்றைய காதல் பயணம் முடிவடைகிறது!

உன் பிரிவுக்கு வருந்திக் கொண்டே
என் வீட்டிற்கு திரும்புகையில்,
வானில் ஒரு வானவில்
மீண்டும் உன்னை நினைவூட்டுகிறது!

Monday, December 04, 2006



காதல் பூதமே காதல் பூதமே
என்மேல் ஏன் உனக்கு கோபமே


இதயம் கிழித்தெடுத்து கண்கள் கொத்தித் தின்று
உயிரை உருகவிட்டுப் போகிறாய்
மீதம் இருக்கும் நானும் கூட
அவளை நினைக்கத்தான் என்கிறாய்

வேண்டாம் போய்விடு வேண்டாம் போய்விடு
காதல் பூதமே போய்விடு

இறுதிவரைக்கும் இதயம் இணைந்திருக்கும்
நட்பைப் போல உன் காதல் இல்லையே
கண்ணீரில் நனையவைக்கும் கவலையில் மூழ்கடிக்கும்
உன் காதல்படு தொல்லையே


வேண்டாம் போய்விடு வேண்டாம் போய்விடு
காதல் பூதமே போய்விடு







Sunday, December 03, 2006


உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லாத போதும்
உன்னைப் பற்றி கவிதைகள்
எழுத துடிக்கிறது என் மனது........................

Friday, December 01, 2006





நாவலின் கடைசி
பக்கத்தைப் படிக்கும் ஆவல் எனக்கு,
உன் ஒவ்வொரு பக்கத்தை
படிக்கும் போதும்........

நான் பக்கத்தில் நிற்கும் போது,
வெட்கத்தில் நனைகிறது ஒரு நிலா!

Thursday, November 30, 2006

எனதுயிரே நீ எங்கே
உன்னைத் தேடிடும் விழிகள் இங்கே

மூன்று பொழுதும்
உன்னை நினைக்காமல்
உறக்கம் வருவதில்லை
உறங்கிடும் போதும்
உன் முகம் விழிகளில் மறைவதில்லை

நேற்று ரசித்து ரசித்து எழுதிய கவிதை

இன்று ஏனோ பிடிக்கவில்லை
உன் பெயரை எழுதிடவோ
காகிதங்கள் போதவில்லை

Wednesday, November 29, 2006


பக்கம் பக்கமாய்
கவிதைகள் எழுதி தயாரான பின்னும்
உன் பக்கத்தில்
நான் வெறும் காகிதமாய்த்தான் நிற்கிறேன்..........

Tuesday, November 07, 2006


நீ விரும்புகிறவர் பட்டியலில்
இல்லாத போதும்
சந்தோஷம் எனக்கு
உன்னை விரும்புகிறவர் பட்டியலில் இருப்பதால்

Sunday, November 05, 2006


மறுஜென்மத்தில் நீ என் அன்பை
மறந்தாலும் ஞாபகப்படுத்தவே,
நீ கண்மூடியபிறகு
நான் கட்டிவைத்தேன் தாஜ்மஹாலை

காகிதத்தைக் கூட
எறும்புகள் மொய்க்கும்
அதில் எழுதியிருப்பது
உன்னைப்பற்றி என்றால்..................

உன்னைப் படைத்த பிரம்மன்
உன் மிச்சத்தை
என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான்
உன்னை இன்னும் அழகாக்க.........

















சிலையை செதுக்கும் போது
சிலையின் வலியை
சிற்பியே ஏற்றுக்கொண்டது போல் இருக்கிறது,
உன் அழகை என் பார்வையால்
இன்னும் அழகாக செதுக்கும் போது...
நான் நானாகவே இருந்தேன்
உன்னைக் காணாதவரையில்.................

Friday, November 03, 2006

அழகு


வானில் வண்ணங்களைச் சுமப்பதால்
வானவில் அழகானது,
மண்ணில் உன்
எண்ணங்களைச் சுமப்பதால்
நானும் அழகானேன்.....

ஒருதலை.....


என் இதயத்தை
தொலைத்த போது
இல்லாத வலி
இன்று நீ
திருப்பிக் கொடுத்தபோது.......

முதல் பார்வை


உன் கண்களின் பார்வையில்
என் முகவரியைத் தொலைத்துவிட்ட நான்
அதை உன் பாதச் சுவடுகளில்
திரும்பப் பெற்றேன்.........

உன் நினைவுகள்


உனை எண்ணி முடிகையில்
அநேகமாய்
வானத்தின் எல்லையில்
நின்றிருப்பேன் நான்....................

Friday, October 27, 2006

மது


இருளிலும் ஒளிர்கின்றன
டாஸ்மாக் கடைகள்!
அதனால் பகலிலும்
இருண்டே கிடக்கின்றன,
எங்கள் வாழ்க்கை.........

Thursday, October 26, 2006

தன் அழகுக்கு காரணம் fair and lovelyதான்
என எந்த உலக அழகியும் சொல்லியதில்லை.
horlicks கம்பெனியின் மகனோ மகளோ
இதுவரை எந்த விளையாட்டிலும் ஜெயித்ததில்லை
ஆனாலும் சொல்லிக் கொள்கிறார்கள்
தங்கள் கம்பெனிதான் சிறந்ததென்று
யாருக்கும் தெரிவதில்லை
மிகைபடுத்தப்பட்ட உண்மையைப் போன்ற
பொய்யை விட
ஒரு சாதாரணமான உண்மை மேலானதென்று......

உன் சுவாசக்காற்றில்
உயிர் வாழ்கிறேன்....
இப்படிக்கு,
உன் விரல்கள்
ஏந்தி நிற்கும் புல்லாங்குழல்.


தாஜ்மஹாலைப் பற்றி
இவ்வளவு வியப்பாக பேசுகிறாய்!
எனக்குத்தான் அதிசயமாயிருக்கிறது,
ஒரு அதிசயம் இன்னொரு
அதிசயத்தைப் பற்றி பேசுவது......

Sunday, October 15, 2006

மொழிகளும்...



நீ ஒவ்வொரு முறை
கையழுத்திடும் போதும்
தவிப்போடு காத்து நிற்கின்றன மொழிகள்.....

சிறகு


வண்ணத்துப்பூச்சி சிறகாய்
பட படக்கிறது என் இதயம்,
நந்தவனமாய் நீ என் அருகில்
நடந்து செல்லும்போது.........

தேவதை


தேவதையை பார்த்தேன்
என்று சொன்னால்
என்னை பைத்தியம் என்கிறாயே
நீ முகம் பார்க்கும் கண்ணாடி
உபயோகிப்பதில்லையா?

தப்பித் தவறி கூட நீ
கரும்பலகையை தொட்டுவிடாதே,
அதன்மேல்
ஒட்டிக்கொள்ளப் போகிறது
உன் சிவப்பு........

தொட்டாச்சிணுங்கி


தொட்டாலே சுருங்கி விடுமாம்
தொட்டாச்சிணுங்கி!
அதற்கு எங்கே தெரியப்போகிறது
பார்த்தாலே சிணுங்கும் ,
உன்னைப்பற்றி....

ஒரு வெள்ளை சுடிதார்


வெள்ளை உடையில்
இன்று நீ வீதீ உலா
அதனால்தான் என்னவோ !
கோடையிலும் வானிலை அறிக்கை
பனிமூட்டம் என
தவறாக வாசிக்கப்பட்டது!

Thursday, October 05, 2006

அம்மா!


அம்மா! அம்மா!
அம்மா! அம்மா! பொன்னம்மா!
உன் பெயரைப் போல
உன் மனசு முழுக்க பொன்னம்மா!


சிறகுகள் இல்லை! இல்லை!
ஆனாலும் நீ தேவதைதான்!
பொன்னகையை விட மதிப்புகூட
உன் புன்னகைதான்!


பத்துமுறை கூப்பிடம்மா,
என் பெயரை சொல்லியே!
எனக்கு பத்து வயசு
குறையுமம்மா உண்மையே!


பூக்களில் படுக்கை செய்து
படுத்தும் பார்த்தேனே!
அதுவும்கூட,
உன் பொன்மடிக்கு ஈடு இல்லையே!


சித்ரா சுசீலா ஜானகி
பாட்டும் கேட்டேனே,
ஆனாலும் எதுவும்
உன் தாலாட்டு போல இல்லையே!


என் பக்கத்தில் நீயும் நிக்கிறப்ப
எந்த லோகமும்
எனக்கு சொர்க்க லோகம்தான்!
கோபத்தில கூட நீ அழகிதான்!
நீ அடிக்கிறப்ப நான் அழுவது நடிப்புதான்!

பத்து மாதம் நீ என்னை
பார்த்துகிட்ட பக்குவமா!
நான் இந்த வாழ்க்கை முழுதும்
உன்னை பார்த்துக்குவேன் பத்திரமா!


எந்தன் கண்ணில் நீர் வழிந்தால்
உன் இதயத்தில் உதிரம் வழிந்ததே!
அந்த இதயத்திற்கு
நானும் என்ன மருந்து தருவேனோ?
எனக்கும் தெரியலியே!


நிலவுல வீடு கட்டி
உன்னை தங்க வைக்கணும்!
கோலாருக்கு உன் பெயரை வைத்து,
உன்னை சொக்க வைக்கணும்!


சென்னை சில்க்ஸ விலைக்கு
வாங்கி, உனக்கு பரிசளிக்கணும்!
ஆக மொத்தம் ஆக மொத்தம்
உனக்கு நானும் நல்ல பிள்ளையா இருக்கணும்!


என் உடலோட ஒட்டியிருந்த
உன் தொப்புள்கொடி பிரிஞ்சிருச்சு!
ஆனா என் உயிரோட ஒட்டியிருக்கும்
உன் அன்பு பிரியலயே?

-- charalmalar

Monday, August 21, 2006

அழகி




சோப்புக் குமிழ்களுக்குள்
உன் சுவாசம் நிரப்பி
எனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாய் !

அவை எனைத்தொட்டு
வெடிக்கும் வரை
எனக்குத் தெரியவில்லை!

அவை நீ எனக்களித்த
பிறந்தநாள் முத்தங்கள் என்று ......

Monday, August 07, 2006



மலராய் மண்ணில்
தவழ்ந்திருந்த
நான் இன்று அதே மண்ணில்
சருகாகிக் கிடக்கிறேன் !
எத்தனை பேருக்கு கிடைக்கும்
பிறந்து வளர்ந்த வீடே
இடிந்து கல்லறையாய் !
என் அடுத்த பிறப்பிலாவது

யுத்தங்களை மறந்திருக்கட்டும்
இந்த உலகம்...
இப்படிக்கு
நேற்றைய இஸ்ரேல்
தாக்குதலில் இறந்த
லெபனான் சிறுமியின் சடலம் !

Monday, July 31, 2006



பூவுலகில் ஒரு தேவதை !
அவள் பூமணம் படைத்த தேவதை !
கலியுலகில் ஒரு தேவதை !
அவள் கள்மனமில்லாத தேவதை !
அரக்க மனம் படைத்த இவ்வுலகில்
அவள் இரக்க குணம் படைத்த தேவதை !
யாரந்த இனிய தேவதை !
ஆம் அன்னை தெரசா ஒரு தேவதைகளின் தேவதை !

Wednesday, July 26, 2006

mazhai



மழை விழுது
மண்ணைத் தொடுது
மனதில் குளிர் நிரப்பி
புது கவிதை தருது

நீங்கள் குடை பிடித்து
அதன்வழி மறைப்பதால்
அது சில நேரங்களில்
வராமலே போய்விடுகிறது
வறட்சி தருகிறது.

மழை ஒரு குழந்தை
அழுது கொண்டே பிறப்பதால்
மழை ஒரு பெண் நிலம்
நோக்கி பயணிப்பதால்

மழை ஒரு விருந்தாளி
நாம் அவரை வரவேற்போம்


Friday, July 14, 2006




உன் பார்வை
பட நேர்ந்தால்

முள் கூட பூ பூக்கும்.

பிறகு எப்படி
என் மனதில் மட்டும்
காதல் பூ பூக்காமல் இருக்கும்?


குடை பிடித்துச்
செல்லும் மழை மேகம் நீ.

நீ
மழையில் நனைவதில்லை
எந்நாளும்....
ஆனால்
நான்
மட்டுமே
நனைகிறேன்.

உனை
பார்க்கும்போதெல்லாம்
மனதொடு மழைச் சாரல் கொண்டு........

Thursday, July 13, 2006


கோயிலுக்கு உள்ளே
உண்டியல்கள் கொள்ளையடிப்பதற்காக.....

வெளியே தட்டுக்கள்
வயிறு பசிப்பதற்காக
....

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அழகாய் தெரிந்தது
பௌர்ணமி நிலவு
சாலையில் தேங்கிய மழை நீரில்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுதந்திர தினத்தன்று
கூண்டிற்குள் நின்று

கொடியேற்றுவார் குடியரசுத் தலைவர்....

ஐம்பத்தியேழு வருட

ஜனநாயகதையும் எதிர்த்து நிற்கும்
பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்கள் .......

இந்நாட்டின்
வருங்கால சிற்பிகள் என்று
தெரிந்தே சிலர்
குப்பை தொட்டியில் விட்டுச் செல்வர்
குழந்தைகளை.....

சில கன்னிகளின் கற்பு
காவல் நிலையத்திலயே களவாடப்படும்....

சில கணங்களில்
சட்டசபைகள்கூட
போர்க்களமாய் மாறிவிடும்....

காவி நிறத்தில் காமுகன்கள்

என செய்திகள் வெளியாகும் .......

காந்தியின்
இராட்டைச் சின்னத்திலும்
குத்த்ப்படும் கள்ள ஓட்டு
......

அரசியலில் மட்டும் அவ்வபோது
தமிழ் தன் முகம் காட்டும்
.....

இந்த கணங்களில் எனக்கென்று
பல இதயங்களல்லாது
சில இதயங்களாவதுவேண்டும்
துடிப்பதற்காக இல்லை
வெடிப்பதற்காக
.......









என் உறக்கத்தில் வந்த

உன் கனவுகளுக்கு உயிர்
தந்துவிட்டு,

நான் கனவாகிப் போனேன்!

மீண்டும் நான் உன் கனவுகளில்

உயிர் பெறுவதற்காக.......

Wednesday, July 12, 2006


உன்னை ஒரு முறையாவது
தாஜ்மஹாலுக்கு அழைத்துச்
செல்ல வேண்டும்,


ஏனெனில்
பாவம் அந்த தாஜ்மஹால்
ஒரு முறையேனும் மும்தாஜை
பார்க்கட்டுமே....



குயிலென குரல் கொண்டாள் !
மயிலென நடைகொண்டாள் !
பூமணம் வீசும் கூந்தல்கொண்டாள்!
தென்றலெனெ தேகம்கொண்டாள் !
கழுத்தென வெண்சங்கு கொண்டாள்!
கரங்களென செங்காந்தள்கொண்டாள்!
வளை போட வாழை கொண்டாள் !
நடை போட நதியைகொண்டாள் !
பூங்கொடி இடைகொண்டாள் !
தேன் சிந்தும் அதரம் கொண்டாள் !
மான் கொம்பென மார் கொண்டாள்!
முழு மதியென முகம்கொண்டாள் !
இவை அத்தனையும்
அவள் கொண்டுவிட்டு
என்னை காதல் கொள்ளாதே என்கிறாள்!
நீ கொடுத்த கற்கண்டை விட அதிகமாய் இனிக்கிறது உன் புன்னகை......

Saturday, July 08, 2006


உன்னைப் பார்த்த நாளில்....

இது வசந்த காலமோ
என் வாழ்விலே.....
மனம் இன்பத்தில் ஆடுதே
இந்நாளிலே......

காவிரி

உன் மீது கற்கள் எறிந்தும்
காகிதக் கப்பல்கள் விட்டும் ரசித்தேன்
பால்ய வ்யதில் .....
வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக் காவிரியின்
புகழை படித்து மகிழ்ந்தேன்
பள்ளி வயதில் ....
உன்மேல் தாவியும்
நீந்தியும் மகிழ்ந்தேன்
பருவ வயதில்....
இன்று உன்னில் தெரியும்
கானல் நீரை மட்டும்
ரசித்துச் செல்கிறேன் மீண்டும்
இவ்வழி வர மனமில்லாமல் ...

Friday, July 07, 2006







பாப்பா பாட்டு

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !
அவை ஷ்காலர்ஷிப்பும் தருமடி பாப்பா
!

கல்வி ஏடுகள் உள்ளதடி பாப்பா
!
அவை பண நோட்டுக்களுக்கேதானடி பாப்பா
!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
லஞ்சங்கள் தானடி பாப்பா
!

ஆணுக்கு சரிசமர் பெண் எனும் திட்டங்கள்
விட்டத்தில் நிற்குதடி பாப்பா
!

நள்ளிரவில் நீ தனியே நடக்கும் வரை
இந்நாட்டிற்கு சுதந்திரம் இல்லையடி பாப்பா
!

ஆனால் அந்த சுதந்திரம் கிடைத்திட
யாதுமொரு சாத்தியம் இல்லையடி பாப்பா
!

மேலைநட்டு குளிர்பான
குடுவைகள் நிரம்புதடி பாப்பா
!

ஆனால் தமிழர் ஏழைக் குடிசை தன்னில்
குடிநீர் தாகமடி பாப்பா
!

காக்கும் கடவுள் அன்று
திரௌவுபதியின் கற்பை காத்தாரடி பாப்பா
!

ஆனால் காக்கும் காவலர்களே இன்று
கற்பை களவாடுவர் அறிந்துகொள் பாப்பா
!

ஒடும் விளையாட்டு போதுமடி பாப்பா !
இந்த சமுதாயத்தை களையெடுக்க நீ புறப்புடு பாப்பா
!



Thursday, July 06, 2006


தாஜ்மஹால்

வானில் முழுமுகமாய்
காட்சி அளிக்கிறது
பௌர்ணமி நிலா !


அதன் சரீரமாய்
மண்ணில் அமர்ந்திருக்கிறது தாஜ்மஹால் !

அஞ்சலி


அஞ்சலி

மனிதர்கள் இறந்தால்
மலர்களைக் கொண்டு அஞ்சலி செலுத்தலாம் ,
ஆனால் இங்கு இறந்ததே
மலர்கள் அல்லவா!
அதனால்
எதைக்கொண்டு அஞ்சலி செலுத்த?

இல்லை! இல்லை!
அவர்கள் மலர்கள் இல்லை1
மொட்டுக்கள்தான்...

மலரும் முன்பே
மடிந்துந போன மொட்டுக்கள்!
அந்த கொடுந்தீயில்
கரிந்து போன சிட்டுக்கள்!

என் கண்ணீர் துளிகள்
அவர்கள் உடல்களை
இல்லாவிட்டலும்,
அவர்கள் உள்ளத்தையாவது
குளிரப்படுத்தட்டும்
...

Tuesday, June 27, 2006


உன் பெயரை ஒருமுறை உச்சரித்தேன், என்னை சர்க்கரை நோய் தாக்கிவிட்டது. ஆனாலும் என் உதடுகள் உன் பெயரை உச்சரிப்பதை விடுவதில்லை...








தம் இதழ்களில்எத்தனை முத்தங்கள் பதித்தாலும் கோபம் கொள்வதில்லை மலர்கள்......
love

love love

everything always

தமிழா!
தமிழா!
இது நமக்கு வசந்த காலம்
!



sweet
sweet
sweet





hello !
i am

charalmalar