Powered By Blogger

Thursday, July 13, 2006


கோயிலுக்கு உள்ளே
உண்டியல்கள் கொள்ளையடிப்பதற்காக.....

வெளியே தட்டுக்கள்
வயிறு பசிப்பதற்காக
....

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அழகாய் தெரிந்தது
பௌர்ணமி நிலவு
சாலையில் தேங்கிய மழை நீரில்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சுதந்திர தினத்தன்று
கூண்டிற்குள் நின்று

கொடியேற்றுவார் குடியரசுத் தலைவர்....

ஐம்பத்தியேழு வருட

ஜனநாயகதையும் எதிர்த்து நிற்கும்
பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்கள் .......

இந்நாட்டின்
வருங்கால சிற்பிகள் என்று
தெரிந்தே சிலர்
குப்பை தொட்டியில் விட்டுச் செல்வர்
குழந்தைகளை.....

சில கன்னிகளின் கற்பு
காவல் நிலையத்திலயே களவாடப்படும்....

சில கணங்களில்
சட்டசபைகள்கூட
போர்க்களமாய் மாறிவிடும்....

காவி நிறத்தில் காமுகன்கள்

என செய்திகள் வெளியாகும் .......

காந்தியின்
இராட்டைச் சின்னத்திலும்
குத்த்ப்படும் கள்ள ஓட்டு
......

அரசியலில் மட்டும் அவ்வபோது
தமிழ் தன் முகம் காட்டும்
.....

இந்த கணங்களில் எனக்கென்று
பல இதயங்களல்லாது
சில இதயங்களாவதுவேண்டும்
துடிப்பதற்காக இல்லை
வெடிப்பதற்காக
.......






No comments: