Powered By Blogger

Tuesday, November 27, 2007


சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து

குரலெழுப்ப முடியாமல்

குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்


பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்

என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,

வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும்


பெண் பார்க்கும் நிகழ்வில்

வாய் ஊனத்திற்கு தனியாய்

மாபிள்ளை வீட்ட்டார் வரதட்சணைகேட்ட போதும்

இல்லாத வலி இப்போது


அழுகின்ற குழந்தைக்கு

தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது

3 comments:

Anonymous said...

சாரல்..உண்மையிலே இந்த கவிதை மனம் வலித்த சாரலாய் வீசுகிறது..அருமை

Suresh said...

Hi da R.V evergreen best is yours da. congrats.... Suresh....

Anonymous said...

Can a pain be so well explained!!!