
பூவுலகில் ஒரு தேவதை !
அவள் பூமணம் படைத்த தேவதை !
கலியுலகில் ஒரு தேவதை !
அவள் கள்மனமில்லாத தேவதை !
அரக்க மனம் படைத்த இவ்வுலகில்
அவள் இரக்க குணம் படைத்த தேவதை !
யாரந்த இனிய தேவதை !
ஆம் அன்னை தெரசா ஒரு தேவதைகளின் தேவதை !
கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik




உன் பார்வை
பட நேர்ந்தால்
முள் கூட பூ பூக்கும்.
பிறகு எப்படி
என் மனதில் மட்டும்
காதல் பூ பூக்காமல் இருக்கும்?

குடை பிடித்துச்செல்லும் மழை மேகம் நீ.
நீ
மழையில் நனைவதில்லைஎந்நாளும்....ஆனால்நான்
மட்டுமேநனைகிறேன்.
உனை
பார்க்கும்போதெல்லாம்மனதொடு மழைச் சாரல் கொண்டு........


என் உறக்கத்தில் வந்த
உன் கனவுகளுக்கு உயிர்
தந்துவிட்டு,நான் கனவாகிப் போனேன்!
மீண்டும் நான் உன் கனவுகளில்
உயிர் பெறுவதற்காக.......

உன்னை ஒரு முறையாவது
தாஜ்மஹாலுக்கு அழைத்துச்
செல்ல வேண்டும்,
ஏனெனில்
பாவம் அந்த தாஜ்மஹால்
ஒரு முறையேனும் மும்தாஜை
பார்க்கட்டுமே....




